உரத்தை 2,000 ரூபாய்க்கு வழங்குவதற்கு தீர்மானம்!

உரத்தை 2,000 ரூபாய்க்கு வழங்குவதற்கு தீர்மானம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேயிலை உரத்தை தேயிலை தொழில்துறையினருக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய மானிய விலையில் உரத்தை வழங்கும்போது தேயிலை உற்பத்தியை மேம்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு ஏக்கரில் மாதாந்தம் ஆயிரத்து 350 கிலோ தேயிலை கிடைக்கிறது.

குறித்த திட்டத்திற்காக இந்த வருடத்திலும் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்ப்பதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.