மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் - இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் இன்று (12) மதியம் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது.
▪️காலி மாவட்டம் - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும்
▪️மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️ஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
▪️ நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️பதுளை மாவட்டம் - பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அம்பாறை மாவட்டம் - அம்பாறை வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அம்பாறை மாவட்டம் - தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கல்முனை பிரதேசம் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக
▪️திருகோணமலை மாவட்டம் - கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
▪️புத்தளம் மாவட்டம் - ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கேகாலை மாவட்டம் - கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அநுராதபுரம் மாவட்டம் - அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
▪️மன்னார் மாவட்டம் - மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்னால்
▪️முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்னால்
▪️வவுனியா மாவட்டம் - வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால்
போராட்டங்கள் காரணமாக இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.