தாழமுக்கம் தொடர்பான விசேட அறிவிப்பு

தாழமுக்கம் தொடர்பான விசேட அறிவிப்பு

நேற்றைய தினம் கிழக்கு-மத்திய அரபிய க் கடல் (Eastcentral Arabian Sea) பிராந்தியத்தில் கோவா (Goa) கரையோரத்திற்கு அப்பால் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியானது (Low Pressure Area) 

இன்று (24.05.2024) South Konkan கரையோரத்துக்கு அப்பால் கிழக்கு-மத்திய அராபிய கடல் பிராந்தியத்தில் ஒரு நன்கமைந்த தாளமுக்க பகுதியாக (Well Marked Low Pressure Area) வலுவடைந்துள்ளது. 

இது வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த வரும் 24 மணித்தியாளத்தில் ஒரு தாழமுக்கமாக (Depression) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.