நீர்கொழும்பு கடற்பகுதியில் நீராட சென்ற இளைஞர்களை காணவில்லை!
நீர்கொழும்பு – ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
20 முதல் 23 வயதுகளையுடைய மூன்று இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூவரையும் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.