3 ரூபாய் குறைவாக சைனோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை அறிவிப்பு!
இலங்கையில் அண்மையில் நிறுவப்பட்ட சீனாவைத் தாயகமாகக் கொண்ட சைனோபெக் லங்கா நிறுவனம் தமது எரிபொருள் விலையை இன்று (01) மதியம் அறிவித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 358 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. (சிபெட்கோ 361)
95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சிபெட்கோ 417)
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 338 ரூபாயாகும். (சிபெட்கோ 341)
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 356 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (சிபெட்கோ 359)
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 231 ரூபாயாகும் என சினோபெக் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. (சிபெட்கோ 231)
இதற்கமைய, சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகியவற்றின் சந்தை விலையினை காட்டிலும் 3 ரூபாய் என்ற குறைந்த விலையில் சைனோபெக் நிறுவனம் எரிபொருளை விற்பனை செய்யவுள்ளது.