கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து மத்திய வங்கி புதிய சுற்றறிக்கைவெளியீடு!

சந்தை வட்டி விகிதங்களில் நிதி நிலைமைகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்ட போதும், சில நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் பொருட்களின் மீதான வட்டி விகிதங்கள் தொடர்ந்து மிகையாகவே உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து மத்திய வங்கி புதிய சுற்றறிக்கைவெளியீடு!

அத்துடன் தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாட்டிற்கு குறித்த தரப்பினர் இணங்கவில்லை எனவும் இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற சகல வணிக வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களை மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைய மாற்றியமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அடகுக் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.

கடனட்டைகள் மூலம் ரொக்க முன்பணத்திற்கு வசூலிக்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 28 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.