காசாவில் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சிறார்கள் உயிரிழப்பு!

காசாவில் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சிறார்கள் உயிரிழப்பு!

காசாவின் அல் - ஷிஃபா மற்றும் கமல் அத்வான் ஆகிய மருத்துவமனைகளில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆறு பேரும் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

அத்துடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காசாவில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.