இங்கிலாந்தின் வாகன உற்பத்தி பெரும் நெருக்கடியில்!

இங்கிலாந்தின் வாகன உற்பத்தி பெரும் நெருக்கடியில்!

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளின் பலவீனம் காரணமாக 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாகன உற்பத்தி மோசமான தொடக்கத்தில் இருந்தது,

கடந்த 2024 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரியில் வாகன உற்பத்தி சுமார் 18% குறைந்ததாக தொழில்துறை தரவுகள் வியாழக்கிழமை (27) வெளிப்படுத்தின.

மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) தரவுகளின்படி,

ஜனவரி மாதத்திற்கான இங்கிலாந்தின் வாகன உற்பத்தியின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 17.7% குறைந்து 78,012 அலகுகளாக பதிவானது.

பயணிகள் கார் உற்பத்தி 14.3% குறைந்து 71,104 அலகுகளாகவும், வணிக வாகன உற்பத்தி 41.5% குறைந்து 6,908 அலகுகளாகவும் இருந்தது.

அதேநேரம், வாகன ஏற்றுமதி 13.4% குறைந்து 61,399 அலகுகளாகவும், உள்நாட்டு விற்பனை 30.5% குறைந்து 16,613 அலகுகளாகவும் பதிவானது.

இதனால் ஏற்றுமதியின் சதவீதம் 78.7% ஆக காணப்பட்டது.

இங்கிலாந்தின் வாகன உற்பத்தியாளர்கள் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை, சவாலான உற்பத்தி நிலைமைகள் மற்றும் சந்தை மாற்றம் ஆகியவற்றினால் கடும் போராட்டத்த‍ை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, இங்கிலாந்தின் ஆடம்பர கார் தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்ட்டின் (AML.L), புதன்கிழமையன்று அதன் பணியாளர்களில் 5% ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது.

இங்கிலாந்து வாகனத் துறைக்கு உதவ அவசர அரசாங்க உதவியின் அவசியத்தையும் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.